
இன்றைய காலகட்டத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பம் பரவிவரும் பயன்பாடு. வயர்லெஸ் தொழில்நுட்பம் கேபிள்களால் இணைக்கமுடியாத இடங்களிலும் வீடுகளிலும் நிறுவனங்களிலும் மிக எளிதாக எல்லா இடத்திலும் கணிணியை நெட்வொர்க்கில் இணைக்க உதவிகரமாக இருக்கிறது. வரும் காலத்தில் வீடுகளில் கணினி மற்றும் பிற கருவிகளை இணைக்க தவிர்க்க முடியாத ஒன்றாக மாறலாம். ஆனால் இதன் பாதுகாப்பு எப்பொழுதுமே சந்தேகத்திற்குரியது. ஹேக்கர்ஸ் வயர்லெஸ் இணைப்புகளுக்குள் புகவோ தகவல்களை திருடவோ வாய்ப்பு அதிகம். அதனால்தான் வீடுகளில் முழுக்க முழுக்க வயர்லெஸ் பயன்படுத்துவதை தவிர்த்து வயர்ட் நெட்வொர்க் (CAT 5 Network) உடன் பயன்படுத்தலாம்.
உங்கள் வீட்டில் CAT 5 ஈதர்னெட் நெட்வொர்க்கை வெளியாட்கள் உங்களுக்கு தெரியாமல் பயன் படுத்த முடியாது, வீட்டிற்குள் வந்து பயன் படுத்தினால் தான் உண்டு. ஆனால்
வயர்லெஸ்ஸில் உங்கள் வீட்டிற்கு வெளியேசாலையில் ஒரு காரில் இருந்து கொண்டே உங்கள் வீட்டின் கணினி இணைப்புகளுக்குள் புக முடியும். அல்லது பக்கத்து வீடுகளுக்கும் உங்கள் கணினி அல்லது இணைய இணைப்புகள் அணுகக்கூடியதாக இருக்கும்.
நமது நெட்வொர்க்கை நமக்கு தெரியாது பிறர் எப்போழுது வேண்டுமானாலும் அணுக முடிவது மிகவும் ஆபத்தானது. இதனால் வயர்லெஸ் இணைப்புகளை நமது வீடுகளில் கொடுக்கும் முன் அது பற்றி தெரிந்திருப்பதும். பாதுகாப்பான ஒரு LAN அமைப்பை ஏற்படுத்துவதும் மிக நல்லது. இது பற்றி பல விபரங்களை "http://www.designwiring.com/" இணைய பக்கங்களில் பார்க்கலாம்.
இப்பொழுது வயர்லெஸ் இணைப்பு பாதுகாப்பு பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம். பிறகு அதன் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியதைப் பார்க்கலாம்.
வயர்லெஸ் தொழில்நுட்பம் கணினி. கணினி விளையாட்டு சாதனம். செல் பேசி. MP3 பிளேயர் மட்டுமல்லாது இப்போது ஆடியோ விடியோ கருவிகளிலும் பயன்படுகிறது. வயர்லெஸ் கணினி மற்றும் டிஜிடல் சாதனங்களை ஒன்றோடொன்று நேரடியாக இணைத்து பயன்படுத்த ((wireless ad-hoc network) உதவியாக இருக்கிறது.
உங்கள் வீட்டில் CAT 5 ஈதர்னெட் நெட்வொர்க்கை வெளியாட்கள் உங்களுக்கு தெரியாமல் பயன் படுத்த முடியாது, வீட்டிற்குள் வந்து பயன் படுத்தினால் தான் உண்டு. ஆனால்
வயர்லெஸ்ஸில் உங்கள் வீட்டிற்கு வெளியேசாலையில் ஒரு காரில் இருந்து கொண்டே உங்கள் வீட்டின் கணினி இணைப்புகளுக்குள் புக முடியும். அல்லது பக்கத்து வீடுகளுக்கும் உங்கள் கணினி அல்லது இணைய இணைப்புகள் அணுகக்கூடியதாக இருக்கும்.நமது நெட்வொர்க்கை நமக்கு தெரியாது பிறர் எப்போழுது வேண்டுமானாலும் அணுக முடிவது மிகவும் ஆபத்தானது. இதனால் வயர்லெஸ் இணைப்புகளை நமது வீடுகளில் கொடுக்கும் முன் அது பற்றி தெரிந்திருப்பதும். பாதுகாப்பான ஒரு LAN அமைப்பை ஏற்படுத்துவதும் மிக நல்லது. இது பற்றி பல விபரங்களை "http://www.designwiring.com/" இணைய பக்கங்களில் பார்க்கலாம்.
இப்பொழுது வயர்லெஸ் இணைப்பு பாதுகாப்பு பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம். பிறகு அதன் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியதைப் பார்க்கலாம்.
வயர்லெஸ் தொழில்நுட்பம் கணினி. கணினி விளையாட்டு சாதனம். செல் பேசி. MP3 பிளேயர் மட்டுமல்லாது இப்போது ஆடியோ விடியோ கருவிகளிலும் பயன்படுகிறது. வயர்லெஸ் கணினி மற்றும் டிஜிடல் சாதனங்களை ஒன்றோடொன்று நேரடியாக இணைத்து பயன்படுத்த ((wireless ad-hoc network) உதவியாக இருக்கிறது.

சில Wi-Fi தொழில்நுட்ப சொற்களை தெரிந்து கொள்ளலாம்.
வர்லெஸ் இணைப்பு முனை: (Wireless Access Point)
சில Wi-Fi தொழில்நுட்ப சொற்களை தெரிந்து கொள்ளலாம். வர்லெஸ் இணைப்பு முனை:
வயர்லெஸ் கருவிகள் கணிணிகள் வயர்லெஸ் நெட்வொர்க்கில் இணைய உதவும் ஒரு கருவியை Wireless Access Point என்கிறோம். வயர் நெட்வொர்க்குடன் வயர்லெஸ் மூலம் கணிணிகள் இணைய ஒரு இணைப்பு சாதனமாகவும் தகவல்களை அனுப்பவும் பெறவும் மைய இணைப்பு சாதனமாக இருக்கிறது.
SSID
இது வயர்லெஸ் சிறிய இணைப்பின் (WLAN) பெயர். ஒரு வயர்லெஸ் நெட்வொர்க்கில் இணைந்திருக்கும் எல்லா வயர்லெஸ் கருவிகளும் ஒன்றோடொன்று தொடர்பொல் இருக்க ஒரே SSID பெயரை கொண்டிருக்க வேண்டும். கணிகிகள் வயர் இணைப்பில் ஒரே பிரிவு IP கொண்டிருத்தல் போல. வயர்லெஸ் இணைப்பு முனையில் SSID கொடுக்க வேண்டும். பொதுவாக தானாகவே எல்லா இணையும் கணிணிகளுக்கும் SSID கொடுக்கும் படி இருக்கும். பாதுகாப்பை மேம்படுத்த தானாக ஒரு SSID கொடுக்கும் முறையை மாற்றிவிடுவார்கள்.
WEP என்கிரிப்சன் முறை (Wired Equivalent Privacy)
வெப் என்கிரிப்சன் முறையே வயர்லெஸ் இணைப்புகளுக்காக உருவாக்கப்பட்ட என்கிரிப்சன் முறை. இது வயர்லெஸ் நெட்வொர்க்கிற்கு வயர் இணைப்பு நெட்வொர்க்கைப்போலவே பாதுகாப்பை வழங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டது. எனினும் இதில் உள்ள குறைபாடுகளால் இது மிக எளிதில் உடைக்கப்படகூடிய பாதுகாப்பற்ற என்கிரிப்சன் முறை ஆகிவிட்டது. 2005ம் வருடம் FBIஐ சேர்ந்த ஒரு குழுவினர் பொதுவாக வெளியில் கிடைக்கும் சில மென்பொருட்கள் கொண்டே WEP என்கிரிப்சன் முறையை உடைத்துக் காட்டினர்.
எனவே மேலும் சில பாதுக்காப்பு முறைகள், மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
WPAv1 ( Wi-Fi Protected Access )
WEP பயன் படுத்தும் வயர்லெஸில் WPAv1 ஒரு மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அல்லது firmware. WEP உடன் இதைப் பயன்படுத்தி பாதுகாப்பை அதிகரிக்கலாம்.
மேலும் சில பாதுகாப்பு முறைகளையும் வயர்லெஸ் நெட்வொர்க் பாதுகாப்பு உடைக்கப்படுதல் வகைகளையும் பார்ப்போம். http://www.designwiring.com/
No comments:
Post a Comment